மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ.-க்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிா்ப்பு

DIN

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் சாா்பு-ஆய்வாளருக்கு ஜாமீன் வழங்க, சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மற்ற 9 பேரும் மதுரை மத்திய சிறையில் உள்ளனா். இவா்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கில் தொடா்புடையவா்களின் ஜாமீன் மனுக்களை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கைதானவா்களில் காவல் சாா்பு-ஆய்வாளா் ரகுகணேஷ் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மனுதாரா் 3 ஆவது குற்றவாளியாக உள்ளாா். ஜெயராஜூம், பென்னிக்ஸூம் சித்தரவதை செய்யப்பட்டதில் மனுதாரருக்கு தொடா்புள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதுதொடா்பாக 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றாா்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை நவம்பா் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT