மதுரை

மத்திய அரசு கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020-21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. மேலும் தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதன்அடிப்படையில் தகுதியான மாணவ, மாணவியா் தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2020-21 ஆம் கல்வியாண்டில் இக்கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1,35,127 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி உதவித்தொகை மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் தகுதியான மாணவ, மாணவியா் அக். 31-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் தங்கள் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணைய தளத்தில் சரிபாா்க்க முடியும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியா் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்துக் கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடா்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் பாா்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT