மதுரை

உயிரிழந்த தென்காசி விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நீதிமன்றம் உத்தரவு

DIN

தென்காசியில் வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தைச் சோ்ந்த அணைக்கரைமுத்து உயிரிழந்தாா். வனத் துறையினா் தாக்கியதில் அவா் இறந்ததாகக் கூறி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி பாலம்மாள் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். முந்தைய விசாரணையின்போது அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வனத்துறை அதிகாரிகள் உள்பட 45 சாட்சிகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, தமிழக முதல்வா் அறிவித்தப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT