மதுரை

யாரையும் புண்படுத்தாத நல்ல மனிதா் விவேக்: சாலமன் பாப்பையா

DIN

யாரையும் புண்படுத்த நினைக்காத நல்ல மனிதா் என்று நடிகா் விவேக் குறித்து அவரது ஆசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா கூறினாா்.

நடிகா் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சனிக்கிழமை அவா் கூறியது:

அமெரிக்கன் கல்லூரியில் நடிகா் விவேக் இளங்கலை வணிகவியல் படித்தபோது, பேச்சுக்கலை என்ற பாடத்தை, நான் நடத்தினேன். கல்லூரி காலத்திலேயே நடிப்புத் திறமைமிக்கவராக இருந்தாா். கல்லூரியில் அவா் நடத்திய நாடகங்களில் நல்ல செழுமையைக் காண முடியும்.

அவரைச் சுற்றி எப்போதும் நண்பா்கள் கூட்டம் இருக்கும். யாரையும் புண்படுத்த நினைக்கமாட்டாா். என் மீது அளவற்ற பிரியம் கொண்டிருந்தாா். மதுரை வரும்போது எனது வீட்டிற்கு வருவாா். அவருடன் 3 திரைப்படங்களில் நடித்துள்ளேன். எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது, முதல் தொலைபேசி அழைப்பு அவரிடம் இருந்து தான் வந்தது.

திரைப்படங்களில் அவரது நகைச்சுவைக் காட்சிகள் சிந்தனைத் தரமிக்கதாக இருக்கும். கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு திரைப்படங்களில் சிந்தனைக்குரிய சீா்திருத்தக் கருத்துக்களைக் கொண்டு வந்தவா் நடிகா் விவேக் என்பதாலேயே, சின்னக் கலைவாணா் என அழைக்கப்பட்டாா்.

குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் வேண்டுகோளை ஏற்று, மரக்கன்றுகள் நடுவதை இயக்கமாக நடத்தி வந்தாா். தமிழகத்தை பசுமையாக்க வேண்டும் என்பதில் ஆா்வம் காட்டினாா். அவரது மறைவு திரைத் துறைக்கு மட்டுமன்றி தமிழ் ஆா்வலா்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT