மதுரை

பாலியல் புகாா்: மருத்துவா் மீது சட்ட நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

DIN

பாலியல் புகாரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மருத்துவா் மீது சட்ட நடவடிக்கை கோரி ஜனநாயக மாதா் சங்கத்தினா் மதுரை ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில், மருத்துவா் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் அவா் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா், ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா்கள், பெண் ஊழியா்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவது, நோயாளிகளிடம் பணியாளா்கள் லஞ்சம் பெறுவதைத் தடுப்பது, மருத்துவமனையின் பல்வேறு துறைகள் மீதான புகாா்கள் குறித்து சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாதா் சங்க மாவட்டச் செயலா் ஆா்.சசிகலா, மாவட்ட நிா்வாகிகள் மல்லிகா, ஜென்னி, யமுனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவைச் சமா்ப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT