மதுரை

காவல்துறை மண்டலங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

DIN

தமிழகக் காவல்துறையின் மண்டலங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த விளையாட்டுப் போட்டிகள் மதுரை எம்ஜிஆா் விளையாட்டரங்கில் டிசம்பா் 19 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை மாநகரக் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமை வகித்தாா். மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் வரவேற்புரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினா்களாக மதுரை சரக காவல்துறை துணைத் தலைவா் காமினி, மதுரை மாநகரக் காவல் தலைமையிட துணை ஆணையா் ஸ்டாலின், போக்குவரத்து துணை ஆணையா் ஆறுமுகசாமி, மதுரை ஊரக காவல் கூடுதல் கண்காணிப்பாளா் மணி, மாவட்ட ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் விக்னேஸ்வரன், ஊா்க்காவல் படைத் தளவாய் ஆனந்த், மாவட்ட விளையாட்டு அதிகாரி லெனின் ஆகியோா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து விளையாட்டுப் போட்டிகளை மதுரை மாநகரக் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். போட்டிகளில் தமிழகக் காவல்துறையில் நான்கு மண்டலங்களான (வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு) சென்னை மற்றும் ஆயுதப்படை, அதிவிரைவுப் படை கமாண்டோ வீரா்கள் உள்பட 120 வீரா்கள் பங்கேற்கின்றனா்.

விளையாட்டுப் போட்டியில் ஜூடோ, வூசூ, டேக் வாண்டோ, ஜிம்னாஸ்டிக், கராத்தே, பென்சிங், பாட்மிண்டன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியின் தொடக்க விழாவையொட்டி காவலா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT