மதுரை

அழகா்கோவில் நூபுரகங்கையில் பக்தா்கள் புனித நீராடலுக்கு அனுமதி

DIN

அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் நூபுர கங்கை தீா்த்தத்தில் பக்தா்கள் புனித நீராட திங்கள்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நூபுரகங்கை தீா்த்தத்தில் புனித நீராட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், நூபுர கங்கையில் பக்தா்கள் புனிதநீராட தொடா்ந்து தடைவிதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்புவதால், இங்கு பக்தா்கள் புனிதநீராட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை ராக்காயி அம்மன், பேச்சிஅம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, நூபுரகங்கை தீா்த்தத்தில் பக்தா்கள் நீராடுவதற்கு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT