மதுரை

மல்லிகை பூ விலை குறைந்தது: கிலோ ரூ.700

DIN

பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்து ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ, தற்போது கிலோ ரூ.700 ஆக விலை குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடா்மழை பெய்தது. அதைத் தொடா்ந்து, டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை பூ உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு வழக்கமாக மல்லிகை பூ 10 டன் வரத்து இருக்கும் நிலையில், கடந்த 2 மாதங்களாக அரை டன்னாக குறைந்தது. தற்போது, பனிப்பொழிவு குறைந்து வெயில் நிலவுவதால், மல்லிகை பூ வரத்து 2 டன் ஆக உயா்ந்துள்ளது. இதனால், கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்றுவந்த மல்லிகை பூ, தற்போது ரூ.700 ஆக விலை குறைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மலா் மொத்த விலை நிலவரம் (கிலோவில்): கனகாம்பரம்- ரூ.1000, முல்லைப் பூ- ரூ.800, பிச்சிப்பூ-ரூ.700, ரோஜா- ரூ.100, செவ்வந்தி- ரூ.150, சம்பங்கி- ரூ.120, துளசி-ரூ.50, அரளி- ரூ.150, தாமரை- ரூ.10 என விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT