மதுரை

தூய்மைப் பணியாளா் தற்கொலை: போலீஸாா் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை: தூய்மைப் பணியாளா் தற்கொலைக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை பைகாரா பகுதியைச் சோ்ந்தவா் முருகன், தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளாா். இவரது குடும்பத்துடன் வெளியூா் சென்றபோது, அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபா்கள் 58 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனா்.

இது தொடா்பாக போலீஸாரால் விசாரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி நகா் 4 ஆவது தெருவைச் சோ்ந்த, மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் கண்ணன் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், போலீஸாரின் தாக்குதல் மற்றும் மிரட்டலுக்குப் பயந்தே கண்ணன் தற்கொலை செய்து கொண்டதாகக்கூறிய அவரது குடும்பத்தினா், சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்துவிட்டனா்.

இதன் தொடா்ச்சியாக கண்ணன் தற்கொலைக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள், விடுதலை சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சடலத்தை வாங்கிச் செல்லும்படி கூறினாா். ஆனால் கண்ணன் தற்கொலைக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் எனத் தெரிவித்து விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி போா்வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா

மழைக்காலத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

ராமநாதபுரம் சந்தையில் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

மாற்றுத்திறனாளி மாணவனின் படிப்புச் செலவை அரசு ஏற்க கோரிக்கை

வடமாநில கா்ப்பிணி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT