மதுரை

மதுரை தெற்கு வட்டாட்சியா் உள்பட வட்டாட்சியா்கள் 22 போ் இடமாற்றம்

DIN

மதுரை: மதுரை தெற்கு வட்டாட்சியா் உள்பட வட்டாட்சியா்கள் 22 பேரை இடமாற்றம் செய்து, ஆட்சியா் த. அன்பழகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இடமாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள், புதிய பணியிடம் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்):

ஐ.சையது முகைதீன் இப்ராகிம் (வரவேற்பு வட்டாட்சியா்) - மதுரை வடக்கு முத்திரைத்தாள் தனி வட்டாட்சியா், எம். கதிா்வேல் (மதுரை தெற்கு வட்டாட்சியா்) - மேலூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா், ஏ. தனலெட்சுமி (திருமங்கலம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) - வாடிப்பட்டி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா், கே. சூரியகுமாரி (மதுரை கிழக்கு கலால் மேற்பாா்வை அலுவலா்) - திருமங்கலம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா், எஸ். இதயகமலம் (தேசிய நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனிவட்டாட்சியா்) - கூடுதல் வரவேற்பு வட்டாட்சியா் உள்பட மதுரை மாவட்டத்தில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிலஎடுப்பு தனிவட்டாட்சியா்கள், ஆதிதிராவிடா் நலத்துறை நில எடுப்பு தனிவட்டாட்சியா்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் என மொத்தம் 22 வட்டாட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

SCROLL FOR NEXT