சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா தொடர் இன்றுடன்(ஏப். 28) நிறைவு பெற்றுள்ளது.
அன்பே வா தொடர் முடிவடையவுள்ளதாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியான நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது.
இந்தத் தொடரில் டெல்னா டேவிஸ் நாயகியாகவும், விராட் நாயகனாகவும் நடித்து வந்தனர். தற்போது நாயகியாக டெல்னா டேவிஸ் மாற்றாக ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார்.
நவம்பர் 2020 முதல் இந்தத் தொடர் 1000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருவதால், தொடரை விரைவில் முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவி வந்தது.
அதேபோல், டிஆர்பியிலும் சற்று பின்தங்கியே இருந்த காரணத்தாலும் அன்பே வா தொடர் தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இத்தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் இன்று ஒளிபரப்பப்பட்டது.
இத்தொடரின் நாயகன் விராட்டுக்கு திரைத்துறையை சேர்ந்த நவீனாவுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஜிங்க்யா ரஹானேதான் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர்: விராட் கோலி

சர்வதேசப் போட்டிகளில் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை புதிய சாதனை!
233 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா: விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா் அரை சதம்

டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




