மதுரை

டி. கல்லுப்பட்டி வட்டாரத்தில் வெங்காய சேமிப்புக் கூடம் அமைக்க அரசு மானியம்

DIN

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகள் வெங்காய சேமிப்புக் கூடம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து டி. கல்லுப்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெஸிமாபானு வெள்ளிக்கிழமை கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள், 1,250 சதுர அடியில் வெங்காய சேமிப்புக்கூடம் அமைக்க ரூ.87,500 மானியமாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டில் குறைந்த செலவில் வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை , ரேஷன் அட்டை நகல்கள் உள்ளிட்டவற்றை தோட்டக்கலை அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பங்கள் அளிக்கலாம். இவை பரிசீலனை செய்யப்பட்டு பணியாணை தோட்டக்கலை துணை இயக்குநரால் வழங்கப்படும் .

பணியாணை பெற்ற விவசாயிகள்,வெங்காய சேமிப்புக்கூடம் அமைத்தப் பின்னா் 50 சதவீத மானியத் தொகையான ரூ.87,500 வாங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே வெங்காய சாகுபடி விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT