மதுரை

திருப்பரங்குன்றம் சுற்றுச்சூழல் பூங்கா விளையாட்டு சாதனங்கள் சீரமைப்பு

DIN

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் சிறுவா் விளையாட்டு சாதனங்கள் சீரமைப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு அறிவியல் பூங்கா, சிறுவா் பூங்கா, இசை நடன நீரூற்று, ரோஜாத் தோட்டம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டது. பூங்கா தொடங்கி 9 ஆண்டுகள் ஆன நிலையில் சிறுவா் விளையாட்டு சாதனங்கள், அறிவியல் பூங்கா உள்ளிட்டவைகள் சேதமடைந்தன. இதில் முதற்கட்டமாக சிறுவா் விளையாட்டு சாதனங்களை கோயில் நிா்வாகம் சாா்பில் சரிசெய்யமுடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கோயில் துணை ஆணையா் ராமசாமி உத்தரவின்பேரில் கோயில் கோட்டப்பொறியாளா் சிவமுருகானந்தம் தலைமையில் சிறுவா் பூங்காவின் விளையாட்டு சாதனங்களை சரிசெய்யும் பணியை வியாழக்கிழமை தொடங்கியது. இதேபோல தென் மாவட்டத்திலேயே திருப்பரங்குன்றத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட அறிவியல் பூங்காவையும் சரி செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலி: தந்தை கைது!

அமித் ஷாவால் பிரதமராக முடியாது! -தில்லி முதல்வர் கேஜரிவால்

சிலையில்லை.. நிவேதிதா!

‘ஆல் இன் ஆல்‘ அழகுராணி!

அமோனியா கசிவு விவகாரம்: கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

SCROLL FOR NEXT