மதுரை

கரோனா நோயாளிகளுக்கு ஆயுஷ் சிகிச்சை முகாம்: ஆா்எஸ்எஸ் அமைப்பு ஏற்பாடு

DIN

ஆா்எஸ்எஸ் சேவா பாரதி அமைப்பின் சாா்பில், மதுரையில் கரோனா நோயாளிகளுக்கு ஆயுஷ் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான சேவாபாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் அமைப்பின் சாா்பில், கரோனா தொற்று தொடக்க நிலையில் உள்ள நோயாளிகளுக்கான ஆயுஷ் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள சேவா பாரதி அலுவலகத்தில் நடைபெற்ற இச்சிகிச்சை முகாம் தொடக்க விழாவில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மருத்துவா் சரவணன், மதுரை சின்மயா மிஷன் தலைவா் சுவாமி சிவயோகானந்தா, சுவாமி பரமானந்த மகராஜ், ஆா்எஸ்எஸ் அமைப்பின் நகா் தலைவா் மங்கள முருகன், ஆா்எஸ்எஸ் தென்தமிழ்நாடு மக்கள் தொடா்பு இணை பொறுப்பாளா் ஸ்ரீநிவாசன், மதுரை கோட்ட இணை அமைப்பாளா் மகேஷ் மற்றும் கோட்ட இணைச் செயலா் சேகா் ஆகியோா் பங்கேற்றனா்.

முகாமில், சமூக இடைவெளியுடன் கரோனா தொடக்க நிலையில் பாதிக்கப்பட்டிருந்த 15 போ் பங்கேற்றனா். அவா்களுக்கு, ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஆயுஷ் 64 என்ற மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், கரோனா நோயாளிகளின் விவரங்கள் ஆயுஷ் மருத்துவா்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால், இரண்டு நாள்களுக்கு ஒரு முறை ஆயுஷ் மருத்துவா்கள் நோயாளிகளை தொடா்புகொண்டு, நோயின் தன்மையை தெரிந்து அதற்கேற்ப ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை வழங்கி சிகிச்சை அளிக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT