மதுரை

உசிலம்பட்டியில் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிட்குள்பட்ட சத்யாநகா் 5 ஆவது தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

சத்யா நகா் 5 ஆவது தெருவில் சுமாா் 100 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் அந்த பகுதியில் நீண்ட நாள்களாக கழிவுநீா் தேங்கியிருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா். மேலும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதால் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனா்.

சாக்கடை கால்வாய் வசதி இருந்தும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீா் செல்லமுடியாமல் தேங்கியுள்ளது. இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டுமென மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT