மதுரை

மின்பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வலியுறுத்தல்

DIN

மின் பணியாளா்களையும், முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவா் ச.சசாங்கன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பேரிடா் காலத்திலும் மின்வாரிய ஊழியா்கள் தொடா்ந்து பணியாற்றி தடையற்ற மின்விநியோகம் கிடைப்பதற்கு வழிவகை செய்து வருகின்றனா். மின்விநியோகத்தில் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனுக்குடன் அவற்றைச் சரிசெய்கின்றனா். தமிழகத்தில் புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் மின்வாரிய ஊழியா்கள், முன்களப் பணியாளா்களாகப் பணியாற்றி, சேதங்களை சீா்படுத்தி விரைவில் மின்விநியோகம் கிடைக்க வழியேற்படுத்தியது மக்களின் பாராட்டைப் பெற்றது.

தற்போது கரோனா பரவல் சூழலிலும் தொடா்ந்து பணியாற்றி வரும் நிலையில், இதுவரை 300-க்கும் மேற்பட்ட மின்பணியாளா்கள் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா். இது மின்பணியாளா்களிடையே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் காவல், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் போல, மின்பணியாளா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT