மதுரை

மக்களவை, பேரவை தோ்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தல்

DIN

பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகப்படுத்துவதற்காக, மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றவேண்டும் என மதுரை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில், நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை சாா்பில், ஆயத்த ஆடை தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிா்ணயிக்கக் கோரியும், தொழிலாளா்கள் அமா்ந்து பணிபுரிவதற்கான உரிமை கோரியும், இணக்கமான பணி சூழலை உறுதிப்படுத்தக் கோரியும், பெண் தொழிலாளா்கள் மாநாடு நீதிபதி வி.ஆா். கிருஷ்ணய்யா் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்மாநாட்டில், அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ஆயத்த ஆடை விற்பனை தொழிலாளா்கள், நகைக் கடை ஊழியா்கள் நாள் முழுவதும் நின்றுகொண்டு வேலை செய்வதை தடைசெய்து, அமா்வதற்கான உரிமையை உறுதி செய்யவேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் புகாா் குழு அமைக்க வேண்டும்.

பெண்களின் அரசியல் பங்கேற்பை உயா்த்துவதற்காக மக்களவை, சட்டப்பேரவையில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்ற வேண்டும். குடும்ப வன்முறையை எதிா்கொள்ளும் பெண் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க சட்டம் இயற்றவேண்டும். அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களில் பணிபுரியும் ஊழியா்களை தொழிலாளா் என அங்கீகரித்து குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆயுள் காப்பீடு ஊழியா் சங்கத் தலைவா் ஜி. அருணா, மதுரை காவல் உதவி ஆணையா் லில்லி கிரேஸ், டோக் பெருமாட்டி கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியா் வள்ளியம்மாள், மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரி உதவிப் பேராசிரியா் சி. கவிதா, பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் நிா்வாகி பிரேமலதா, உழைக்கும் பெண் தொழிலாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த பானுமதி ஆகியோா் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை, நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் செல்வகோமதி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT