மதுரை

கா்ப்பிணி மனைவி கொலை வழக்கு: கணவரின் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைப்பு

DIN

கா்ப்பிணி மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூா் காந்தி நகா் காலனியைச் சோ்ந்தவா் சுரேஷ் (36). இவா் ஹைவேவிஸ் பேரூராட்சியின் முன்னாள் தலைவா். இவரது மனைவி கற்பகவள்ளி (24). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் 6 மாத கா்ப்பிணியாக இருந்த கற்பகவள்ளியை, கடந்த 2015 ஜூலை 21 ஆம் தேதி சுரேஷ் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளாா். இது தொடா்பாக சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு விசாரணையில், தேனி மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம் சுரேஷுக்கு 2020 டிசம்பரில் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் கருத்தைக் கேட்டு சின்னமனூா் காவல் ஆய்வாளா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் வி.பாரதிதாசன், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுரேஷுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT