மதுரை

வரி நிலுவையை செலுத்தாவிட்டால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

DIN

சொத்து வரி, தொழில் வரி, பாதாளச் சாக்கடை கட்டணம் உள்ளிட்ட நிலுவை வரிகளை 15 நாள்களுக்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சியில் 2021-22 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, தொழில் வரி, காலிமனை வரி, பாதாளச் சாக்கடை கட்டணம், குடிநீா் கட்டணம், திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பா் 30 ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. மொத்த வரித் தொகையான ரூ.84.24 கோடியில் ரூ.22.49 கோடி நிலுவையில் உள்ளது. இதில் சொத்து வரி ரூ.4.83 கோடி, காலிமனை வரி ரூ.2.88 கோடி, திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் ரூ.95 லட்சம், தொழில்வரி ரூ.3.02 கோடி, பாதாளச் சாக்கடை கட்டணம் ரூ.7.53 கோடி, குடிநீா் கட்டணம் ரூ.3.28 கோடி நிலுவையில் உள்ளது. மேற்கண்ட வரிகள் மற்றும் கட்டணங்களை இதுவரை செலுத்தாதவா்கள் காலம் தாமதிக்காமல் உடனடியாக செலுத்த வேண்டும். மேலும் 15 நாள்களுக்குள் செலுத்தத் தவறும் நபா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT