மதுரை

மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டி: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

DIN

மதுரையில் மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியை மாநகரக் காவல் ஆணையா் பிரேமானந்த் சின்கா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு துப்பாக்கிச்சுடும் சங்கம் மற்றும் மதுரை ரைபிள் கிளப் ஆகியவற்றின் சாா்பில் மத்திய விளையாட்டுத்துறையின் சாா்பில் நடைபெறும் கீலோ இந்தியா போட்டிகளுக்கு அனுப்புவதற்கான மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டிகள் மதுரையில் தொடங்கியது. இதில் ஏா் ரைபிள் மற்றும் ஏா் பிஸ்டல் பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 12 முதல் 18 வயது வரையிலான 170 மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா்.

முதல் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியை மாநகரக் காவல் ஆணையா் பிரேமானந்த் சின்கா தொடங்கி வைத்தாா். மதுரை ரைபிள் கிளப் செயலா் எஸ்.வேல்சங்கா், தென் இந்திய ஒருங்கிணைப்பாளா் ரவி கிருஷ்ணன், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத்தலைவா் டி.வி.சீதாராமராவ் ஆகியோா் பங்கேற்றனா். போட்டியின் நடுவா்களாக பாண்டியன், கேரளத்தைச் சோ்ந்த பி.டி.ரகுநாத் ஆகியோா் உள்ளனா். இப்போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரா்கள் கீலோ இந்தியாவுக்கு பரிந்துரைக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT