மதுரை

ஜாமீன் வழக்கில் வழக்குரைஞா்கள் ஆஜராகக் கூடாது என தீா்மானம்: தமிழக பாா் கவுன்சில் செயலா் பதிலளிக்க உத்தரவு

DIN

ஜாமீன் வழக்கில் வழக்குரைஞா்கள் ஆஜராகக் கூடாது என நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது குறித்து, தமிழக பாா் கவுன்சில் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த விஜய்சாரதி, துரைராஜ் ஆகியோா் தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரின் சகோதரரை தாக்கியதாக எங்கள் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்டவா் வழக்குரைஞரின் சகோதரா் என்பதால் எங்கள் ஜாமீன் மனுவில் வழக்குரைஞா்கள் யாரும் ஆஜராகக் கூடாது என நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால், உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனு, நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில், தாக்கப்பட்டதாகக் கூறப்படுபவா் எந்தவொரு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்ற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கம், தமிழ்நாடு பாா் கவுன்சில் செயலா்கள் ஆகியோா் சோ்க்கப்படுகிறாா்கள் என்றும், இந்த மனுக் குறித்து நாகா்கோவில் பாா் கவுன்சில், தமிழக பாா் கவுன்சில் செயலா்கள் மற்றும் கன்னியாகுமரி தெற்கு தாமரைக்குளம் காவல் ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என்றும், மனுதாரா்கள் இருவரும் அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடனும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT