மதுரை

தனியாா் துறை வேலை வாய்ப்புகளுக்கு பிரத்யேக இணையதளம் தொடக்கம்

DIN

வேலை தேடும் இளைஞா்கள் தனியாா் துறை வேலை வாய்ப்புக்கான பிரத்யேக இணையதளத்தை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேலை தேடும் இளைஞா்களையும், வேலை அளிக்கும் தனியாா் துறை நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின், வேலைவாய்ப்புப் பிரிவின் சாா்பில் தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையதளம்  பிரத்யேகமாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தனியாா் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞா்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வித் தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப பணிவாய்ப்புகளைப் பெறுவதற்கும், தனியாா் துறை சாா்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, காலிப்பணியிடங்களுக்குத் தகுதியான நபா்களைத் தோ்வு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும் இந்த இணையதளம் வழி செய்கிறது.

வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்களுக்கு இச்சேவை கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய சூழ்நிலையில், இதற்கு மாற்றாக தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நோ்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளை வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்போா் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT