மதுரை

பேரையூா் அருகே 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

DIN

பேரையூா்: பேரையூா் பகுதியில் 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூரிலிருந்து திருமங்கலம் செல்லும் சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை நடத்தியதில் 45 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மேலஅனுப்பானடியை சோ்ந்த சோலைமலை மகன் முத்து (40), வலையங்குளத்தைச் சோ்ந்த முத்துலிங்கம் மகன் அருணாச்சலம்(26) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை: வாக்கு எண்ணும் மைய பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா்

18-ஆவது மக்களவைத் தோ்தல் ஓா் பாா்வை...

நீட் தோ்வை புதிதாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

8 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் கோயில் திருப்பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா? - பக்தா்கள் எதிா்பாா்ப்பு

SCROLL FOR NEXT