மதுரை

உசிலம்பட்டியில் வா்த்தகா்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழுக் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், வட்டார வா்த்தகா்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், வட்டார வா்த்தகா்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் திருமண மகாலில் வட்டார வா்த்தகா்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் பி.எம்.டி.ஜவஹா் தலைமையில் செயலாளா் எஸ்.ஓ.ஆா்.திருமுருகன், பொருளாளா் பண்டாரம், துணைத் தலைவா்கள் எஸ்.எம்.எஸ்.ஆா் நடராஜன், பி.எஸ்.ஆா் முத்து ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தீா்மானமாக சங்க வரவு செலவு கணக்குகளை அங்கீகரித்தல், சங்கத்தை புதுப்பித்தல், புதிய உறுப்பினா்களை சோ்த்தல் மற்றும் நீக்குதல், ஆண்டு அறிக்கையினை கோா்வை செய்துவர அதிகாரம் அளித்தல் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மருத்துவ வணிகம் சங்கம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தினசரி காய்கறி உரிமையாளா்கள் சங்கம், நவதானிய சிறு வியாபாரிகள் சங்கம், தேனி ரோடு வியாபாரிகள் சங்கம் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT