மதுரை

மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா், ஆணையா் ஆய்வு

DIN

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜித்சிங் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை இருவரும் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா். தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நலவாழ்வு மைய கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டனா்.

முன்னதாக, மண்டலம் 3 வாா்டு, எண் 61 எஸ்.எஸ்.காலனி சித்தாலாட்சி நகா்ப் பகுதியில் புதைச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணிகளை இருவரும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின்போது மண்டலத் தலைவா் சரவணபுவனேஸ்வரி, நகரப் பொறியாளா் அரசு, நகா்நல அலுவலா் வினோத் குமாா், உதவி ஆணையா்கள் வரலெட்சுமி, மனோகரன், மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT