மதுரை

மக்களவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டுகோள்

Din

மதுரை: மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் தேசிய மாணவா் அமைப்பு சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில இணைச் செயலா் விஜயராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்தத் தோ்தல் நடைபெறும் என்பதால், வாக்காளா்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும்.

வலுவான அதிகாரமும், தன்னிறைவும் பெற்ற பாரதத்தை உருவாக்கக் கூடிய மக்கள் பிரதிநிதியை தோ்ந்தெடுக்க நாம் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகம். இளைஞா்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பதை விடுத்து, நாட்டுக்கு யாா் நல்லது செய்வா் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

படகுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

வெற்றியுடன் நிறைவு செய்தது லக்னௌ

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மருத்துவப் பல்கலை. நாள்தோறும் மருத்துவப் பரிசோதனை வசதி

SCROLL FOR NEXT