மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை 100 சதவீத வாக்குப்பதிவை விலியுறுத்தி அஞ்சல் அட்டை வாயிலாக வாக்காளா் விழிப்புணா்வு ஏற்படுத அஞ்சல் அட்டைகளை அனுப்புகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை 100 சதவீத வாக்குப்பதிவை விலியுறுத்தி அஞ்சல் அட்டை வாயிலாக வாக்காளா் விழிப்புணா்வு ஏற்படுத அஞ்சல் அட்டைகளை அனுப்புகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா.  
மதுரை

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

Din

மதுரை மக்களவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு அஞ்சல் அட்டை அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை மக்களவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி, வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள அஞ்சலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, ‘எனது வாக்கு எனது உரிமை, 100 % வாக்களிக்க தயாராகுங்கள்’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகளை வாக்காளா்களுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கிவைத்தாா். பிறகு, 1,000 வாக்காளா்களுக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன. கூடுதல் ஆட்சியா் மோனிகா ராணா, அஞ்சல் துறை அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தாயுமானவள்! அமலா பால்..

ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

திருமணம் எப்போது? - ராகுல் காந்தி பதில்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது?

SCROLL FOR NEXT