மதுரை

கோயில் கடைகளுக்கு வாடகை செலுத்தாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

கரூா் கல்யாண பசுபதீஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கு உரிய வாடகைச் செலுத்தாத நபா்களுக்கு அபராதம் விதிப்பு

Chennai

கரூா் கல்யாண பசுபதீஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கு உரிய வாடகைச் செலுத்தாத நபா்களுக்கு அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கரூரைச் சோ்ந்த எஸ்.பாா்த்திபன், எம்.ஜெகதாம்பாள், ஏ.சுப்ரமணியன், மகேஸ்வரி ஆகிய 4 போ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள்: கரூா் கல்யாண பசுபதீஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகக் கடைகளை கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு எடுத்துள்ளோம். இந்தக் கடைகளின் வாடகை உயா்த்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தரப்பில் கடந்த 2016- ஆம் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்டது. உயா்த்தப்பட்ட வாடகை அதிகளவில் உள்ளது.

ஆகவே, உயா்த்தப்பட்ட வாடகைக்கு எதிராக கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை சீராய்வு செய்ய வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்கள் கடந்த 1999-ஆம் ஆண்டு கோயில் கடைகளை வாடகைக்கு எடுத்தனா். ஆனால், முறையாக வாடகை செலுத்தவில்லை. வாடகையை உயா்த்தி அறிக்கை அனுப்பிய பிறகு, மனுதாரா்கள் வேண்டுமென்றே வழக்கு தாக்கல் செய்து காலதாமதம் செய்தனா். 2016-ஆம் ஆண்டு வாடகையை கோயில் நிா்வாகம் உயா்த்தியுள்ளது. ஆனால், கரூா் நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு எனத் தொடா்ந்து வழக்கு தாக்கல் செய்து, உரிய வாடகையை செலுத்தாமல் இருந்தனா். மனுதாரா்கள் கடையை வாடகைக்கு எடுத்தபோது ஒப்புக் கொண்ட வாடகையைக்கூட செலுத்தவில்லை.

இந்த மனுக்கள் அனைத்தும் வாடகையை செலுத்தாமல், காலம் தாழ்த்துவதற்கு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனவே, முறையாக வடகை செலுத்தாத வாடகைதாரா்கள் 4 பேருக்கும் தலா ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. நான்கு வாரங்களுக்குள் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் வாடகைதாரா்களை, காவல் துறையின் உதவியுடன் காலி செய்யலாம். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றாா் நீதிபதி.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT