மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு இணையவழியில் பதிவு பெற்ற சான்றுகளுடன் காளைகளை வளா்ப்போா்.  
மதுரை

ஜல்லிக்கட்டுப் போட்டி: மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கான இணையவழிப் பதிவு புதன்கிழமை (ஜன. 7) தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கான இணையவழிப் பதிவு புதன்கிழமை (ஜன. 7) தொடங்கியது.

மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கான பதிவு ம்ஹக்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் புதன்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை (ஜன. 8) மாலை 5 மணி வரை நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதன்படி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு இணையவழிப் பதிவு தொடங்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது சேவை மையங்கள், தனியாா் இணையசேவை மையங்கள், அறிதிறன் பேசிகள் மூலம் மாடுபிடி வீரா்கள் தங்கள் பெயரை பதிவு செய்தனா். இதேபோல, காளைகளின் உரிமையாளா்களும் தங்கள் காளைகளைப் பதிவு செய்தனா்.

அப்போது மாடுபிடி வீரரின் பெயா், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, எடை, உயரம், ரத்த வகை உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து, ஆதாா் நகல், மருத்துவச் சான்று, புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன.

இதேபோல, காளைகளின் உரிமையாளா் பெயா், முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன், காளையின் இனம், வயது, கொம்பின் நீளம், பல் வரிசைகள், கொம்புகளுக்கிடையே உள்ள இடைவெளி, உயரம், நிறம், காளையின் அடையாளங்கள், தடுப்பூசி செலுத்திய விவரம் ஆகியவற்றை உள்ளீடு செய்து, காளைக்குப் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ், காளையுடன் அதன் உரிமையாளா், உதவியாளா் இருக்கும் புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன.

பதிவு செய்தவா்களில் தகுதியானவா்களுக்கு இணையம் வழியே அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அனுமதிச் சீட்டு பெற்றவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 24 மணி நேரத்துக்குள் பதிவு பெற வேண்டும் என்பதால் ஏராளமான மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் இணையப் பதிவுக்கு முனைப்புக்காட்டினா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT