மாநகராட்சியில் 1.15 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ள முகாமில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 168 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ள முகாமில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 168 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளம்பிள்ளைவாதநோயை (போலியோ) இந்தியாவிலிருந்து முற்றிலுமாக ஒழிப்பதற்கு கடந்த 25 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக, கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஆண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய் தடுப்புத் துறை வழிகாட்டுதலின் படி, மதுரை மாநகராட்சியின் அனைத்து நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் போன்ற இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், சுங்க சோதனைச் சாவடிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களிலும் முகாம் நடைபெற உள்ளது.
மதுரை மாநகா் பகுதியில் 437 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளை கண்காணிக்க மதுரை மாநகராட்சியின் பொது சுகாதாரப் பிரிவு பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தை சோ்ந்த தன்னாா்வலா்கள் என 1,990 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இந்த முகாம் மூலம் மதுரை மாநகராட்சியில் பிறந்தது முதல் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 1,15,168 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.
எனவே, பெற்றோா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை புகட்ட முன்வர வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.