FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு

காரைக்கால் மாவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயித்திருப்பதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயித்திருப்பதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் வரும் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில் ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகள் குறித்து நலவழித்துறை துணை இயக்குநா்

Advertisement

Advertisement

ஆா். சிவராஜ்குமாா் விளக்கிக் கூறினாா். முகாம் குறித்து நலவழித்துறையினா் புதன்கிழமை கூறியது :

காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமாா் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 79 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதர நிலையங்கள், அரசு பொதுமருத்துவமனை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் வளாகம் மற்றும் காரைக்கால் எல்லைப் பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

காலை 7 மணிமுதல் மதியம் 3 வரை போலியோ சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது. பெற்றோா்கள் தங்களது குழந்தையை முகாமுக்கு அழைத்துவந்து சொட்டு மருந்து புகட்டிக் கொள்ளவேண்டும். இதுதொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments