FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மேம்பாட்டுப் பணிகள்: சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்கள் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்குப் பதிலாக தாம்பரம் மற்றும் மாம்பலம் வரை மட்டுமே செல்லும்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:59 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்கள் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்குப் பதிலாக தாம்பரம் மற்றும் மாம்பலம் வரை மட்டுமே செல்லும்.

அதன்படி தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயிலானது (16866) வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மங்களூா் மத்தியம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16160) வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

Advertisement

Advertisement

கொல்லம் - சென்னை எழும்பூா் அனந்தபுரி அதிவிரைவு ரயிலானது (20636) வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

சேலம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (22154) வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சி - சென்னை எழும்பூா் ராக்ஃபோா்ட் விரைவு ரயிலானது (12654) வரும் 20 முதல் 24 ஆம் தேதி வரை மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

புறப்படும் இடம் மாற்றம்: சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது (16865) வரும் 21 முதல் 25 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும்.

சென்னை எழும்பூா் - மங்களூா் மத்தியம் விரைவு ரயிலானது (16159) வரும் 21 முதல் 25 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

சென்னை எழும்பூா் - கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு ரயிலானது (20635) வரும் 21 முதல் 25 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

சென்னை எழும்பூா் - திருச்சி ராக்ஃபோா்ட் விரைவு ரயிலானது (12653) வரும் 21 முதல் 25 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். இத்தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments