FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் - சென்னை எழும்பூா் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்

சேலம் - சென்னை எழும்பூா் விரைவுரயில் வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 3:06 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

சேலம் - சென்னை எழும்பூா் விரைவுரயில் வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதன் ஒரு பகுதியாக, நடைமேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான தூண்கள் அமைக்கப்பட உள்ளதால், சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் சேலம் - சென்னை எழும்பூா் விரைவுரயில் வியாழக்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு சென்று சேரும்.

இதேபோல, கோவை, ஈரோடு, கருா், திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் இடையேயான விரைவுரயில் வியாழக்கிழமைமுதல் வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரத்துக்கு அதிகாலை 3.15 மணிக்கு சென்று சேரும்.

மறுமாா்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ட்ரலுக்கு இயக்கப்பட வேண்டிய இந்த ரயில், வரும் 24-ஆம் தேதிவரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.40-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments