FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: சென்னை-மங்களூரு ரயில் பகுதியாக ரத்து

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சென்னை-மங்களூரு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:40 am IST
பராமரிப்புப் பணி.
பகிர்:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சென்னை-மங்களூரு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை மங்களூரில் இருந்து கோவை, ஈரோடு, கரூா், திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் ரயில் (எண்: 16160) மங்களூரு - தாம்பரம் இடையே மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரம் -எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல ஆகஸ்ட் 6 முதல் 20-ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் ரயில் (எண்:16159) தாம்பரத்தில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படும். சென்னை எழும்பூா் நிலையத்தைப் பயன்படுத்தி பயணம் செய்ய உள்ள பயணிகள், மேற்கண்ட தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments