பொறியியல் பணிகள்: சேலம் ரயில் இன்று பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக சேலம்-மயிலாடுதுறை ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகள் காரணமாக சேலம்-மயிலாடுதுறை ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயிலானது (16811) சனிக்கிழமை (ஜூலை 4) வீரராக்கியம் - சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயிலானது மயிலாடுதுறை - வீரராக்கியம் இடையே மட்டும் இயங்கும்.
மறுமாா்க்கமாக, சேலம்-மயிலாடுதுறை மெமு ரயிலானது (16812) சனிக்கிழமை சேலம் - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூா் - மயிலாடுதுறை இடையே மட்டும் இயங்கும். பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) சனிக்கிழமை (ஜூலை 4) பாசூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு - பாசூா் இடையே மட்டும் இயங்கும்.
Advertisement
Advertisement
காலதாமதம்: காரைக்குடி-திருச்சி பயணிகள் ரயிலானது (56832) சனிக்கிழமை, 6, 7, 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில் காரைக்குடியிலிருந்து 25 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.