பராமரிப்பு பணி: பாலக்காடு: திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து
மதுரை பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூலை 28, 29 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் (எண்: 16731) பாலக்காடு - சாத்தூா் இடையே மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது, சாத்தூா் - திருச்செந்தூா் இடையே ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.