ராமநாதபுரம்

கமுதி வட்டார அளவிலான விநாடி-வினா போட்டி

DIN

கமுதியில் வெள்ளிக்கிழமை வட்டார அளவிலான விநாடி- வினா போட்டி நடைபெற்றது.
  தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரக் கிளை சார்பில் கே.என். தொடக்கப் பள்ளியில் இப்போட்டி நடைபெற்றது. இதில் கமுதி வட்டார அளவிலால்  20- க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 200- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.    நிகழ்ச்சியில் கே.என். பள்ளித் தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு ரெத்தினசாமி அறிவியல் கழகத் தலைவர் ஆர்.கனகசபாபதி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
  போட்டியில் 6,7,8 ஆம் வகுப்பு பிரிவில் வலையபூக்குளம் கே.வி.சாலா நடுநிலைப்பள்ளி முதல் இடத்தையும், அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும், கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன. 9,10 -ஆம் வகுப்பு பிரிவில் கமுதி இக்பால் உயர்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், கமுதி கலாவிருத்தி மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும், அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.  11,12 ஆம் வகுப்பு பிரிவில் கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தையும், கே.என்.பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும், கலாவிருத்தி மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT