ராமநாதபுரம்

சாயல்குடியில் மோட்டார் வாகன சோதனை: ரூ.1.50 லட்சம் அபராதம் வசூல்

DIN

சாயல்குடியில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
 ராமநாதபுரம் மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து சாயல்குடி பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாமான உப்பு லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகமாக லோடுகளை ஏற்றி வந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டன. இந்நிலையில் பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிமான பாரங்களை ஏற்றியவாறு விதிமுறைகள் மீறி வந்தன. இதையடுத்து அந்த வாகன ஓட்டிகளிடம்  ரூ.1.50 லட்சம் அபராத தொகையாக பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் வசூலித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT