ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

DIN

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் இறந்த டால்பின் ஒன்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.
   தனுஷ்கோடி கடற்கரையில் இறந்த டால்பின் ஒன்று கரை ஒதுங்கியிருப்பது குறித்து தகவலறிந்த மண்டபம் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கால்நடை மருத்துவர் மூலம் டால்பின் உடலை பரிசோதனைசெய்தபிறகு அங்கேயே புதைத்தனர்.
  இது குறித்து வனச்சரகர் சதீஷ் கூறியது: இறந்து கரை ஒதுங்கிய டால்பின் பெண் இனத்தில் கூன்முதுகு வகையைச் சேர்ந்தது. இதற்கு 20 வயது இருக்கலாம். 250 கிலோ எடையும், 8 அடி நீளமும், 75 செ.மீ.அகலமும் உடையதாக இருந்தது.
  5 அடி சுற்றளவு கொண்ட டால்பின் தலையில் அடிபட்டு இறந்துள்ளது. கடலுக்கடியில் உள்ள பாறையில் மோதி உயிரிழந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT