முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நவ. 22-இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான பொதுமக்களின் குறை தீர்க்கும் கூட்டம் இம்மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான பொதுமக்களின் குறை தீர்க்கும் கூட்டம் இம்மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்க ஏதுவாக அவர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் இம்மாதம் 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும். கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி தலைமை வகிக்கிறார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இக்குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை முகவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
 இக்கூட்டத்தில் சமையல் எரிவாயு உபயோகிப்பவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →