முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ அமைப்பின் ஆயத்தக் கூட்டம், சக்கரக்கோட்டை தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:22 am IST
பகிர்:

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ அமைப்பின் ஆயத்தக் கூட்டம், சக்கரக்கோட்டை தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
      இக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் சிவபாலன் தலைமை வகித்தார். தமிழகத் தலைமை ஆசிரியர் கழகத் தலைவர் வி. முருகன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மு. பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துல், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கப் போராட்டம், தொடர் மறியல் போராட்டம் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், 16-க்கும் மேற்பட்ட இணைப்புச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.