ராமநாதபுரம்

சட்டம் பயின்றவர்கள் சமூக நலன்களை காக்கும் விதமாகச் செயல்பட வேண்டும்: முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கயல்விழி பேச்சு

DIN


வழக்குரைஞர்கள், நீதிபதிகள் சட்டக்கல்லூரி மாணவர்கள் சமூக நலனைக் காக்கும் வகையில் செயல்படவேண்டும் என ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கயல்விழி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான 15 நாள்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயிற்சியைத் தொடங்கி வைத்து முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஏ.கயல்விழி பேசியது: நமது நாட்டின் ஜனநாயகம், மக்கள் உரிமையை சட்டரீதியாகக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பை நீதித்துறை வகிக்கிறது. உலக அளவில் பெருமைக்குரிய நமது நீதித்துறையின் அடிப்படை கட்டமைப்பு சட்டக்கல்லூரிகளில் தொடங்குகிறது.
சட்டங்களைப் பயின்றவர்கள் ஏழைகளிடம் இரக்கமுடையவர்களாகவும், மனிதநேயம் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும். எதிர்காலத்தில் சமூக நலன் காக்கும் வகையில் சட்டம் பயின்றவர்கள் திகழ வேண்டும் என்றார்.
முன்னதாக மாவட்ட சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான வி.ராமலிங்கம் வரவேற்றார். ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ராமபிரான்ரஞ்சித்சிங், வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் ஏ.ஆர்.நம்புநாயகம், மூத்த வழக்குரைஞர் கே.குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக பணியாளர்கள் எஸ்.லோகநாதன், நிர்வாக அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT