முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே பெண்கள் பொது சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கமுதி அருகே பராமரிப்பின்றி கிடக்கும் பெண்கள் பொது சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

கமுதி அருகே பராமரிப்பின்றி கிடக்கும் பெண்கள் பொது சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கமுதி அருகே பெருநாழி ஊராட்சிக்குள்பட்ட பெருநாழி- கோவிலாங்குளம் சாலையில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து கடந்த 2001-இல், கழிப்பறை, குளியலறைகள் மற்றும் ஆழ்துளை கிணறு வசதியுடன்  ஒருங்கிணைந்த குழந்தைகள், மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.  இதனிடையே கடும் வறட்சியின் காரணமாக இங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீரின்றி இந்த பொது சுகாதார வளாகம் முடங்கியது.
 இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி சார்பில் இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று மீண்டும் சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 
இந்நிலையில் மீண்டும்  முறையான பராமரிப்பு 
இல்லாததால் இந்த பொது சுகாதார வளாகத்தை சுற்றிலும் முள்செடிகள் 
வளர்ந்து, புதர் மண்டி கிடப்பதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு கட்டட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும்  நிலையில் உள்ளது. 
இதனால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் திறந்த வெளியை பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 
எனவே மாவட்ட நிர்வாகம், பெருநாழி ஊராட்சி நிர்வாகம் ஆகியவை தலையிட்டு இந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →