ராமநாதபுரம்

மணல் திருட்டை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி

DIN

அபிராமம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப் பிடிக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை, லாரி ஏற்றி கொல்ல முயற்சித்ததாக அதன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
கமுதி தாலுகா அபிராமம் அடுத்த வல்லக்குளம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த புகாரையடுத்து கமுதி வருவாய்த்துறையினர் மற்றும் அபிராமம் போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வல்லக்குளத்தில் இருந்து அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை அபிராமம் வருவாய் ஆய்வாளர் பிரசாத் மடக்கிப் பிடிக்க முயன்ற போது அவர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி நடந்ததாம். இதில் தப்பிய அவர், மோட்டார் சைக்கிளில் அந்த லாரியை விரட்டிச் சென்ற போது லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனை அடுத்து அந்த லாரியையும், அதனுடன் வந்த மோட்டார் சைக்கிளையும் போட்டு விட்டு அவற்றில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர். பின்னர் அந்த லாரியை போலீஸார் கைப்பற்றி அபிராமம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் பிரசாத், தன்னை லாரியை வைத்து ஏற்றிக் கொல்ல முயன்றதாகவும், அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிச் செல்லப்பட்டதாகவும் அளித்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸார் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT