ராமநாதபுரம்

உச்சிப்புளியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

DIN

மண்டபம் ஒன்றிய அதிமுக சார்பில் உச்சிப்புளியில் எம்ஜிஆரின் 101 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய அதிமுக சார்பில் உச்சிப்புளி எம்ஜிஆர் திடலில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தலைமை வகித்துப் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கிட தமிழக முதல்வரிடம் பேசி வைகை தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு வந்ததுடன் நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. 
இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் சட்டக்கல்லூரி, மருத்துவமனைக்கு அதிநவீன கருவிகள், பல்வேறு இடங்களில் சாலை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதில் மண்டபம் ஒன்றியச் செயலாளர் எம்.கே.கே.தங்கமரைக்காயர், திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, ராமநாதபுரம் ஒன்றியச் செயலாளர் அசோக்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கே.கே.அர்ச்சுணன், ராமேசுவரம் நகர் மன்ற முன்னாள் தலைவர் அ.அர்ச்சுணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT