ராமநாதபுரம்

காவிரி கூட்டுக்குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதி

DIN

முதுகுளத்தூர் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட விநியோகம் 10 நாள்களாக நிறுத்தப்பட்டதால் 2 கிராம மக்கள் குடிநீரின்றி அவதியடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் ஊராட்சியில் அமைந்துள்ள காவிரி நீர்தேக்க தொட்டியில் இருந்து வெளிக்கிராமங்களுக்கு செல்லக்கூடிய குடிநீர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் காத்தாகுளம், கீழமானாங்கரை ஆகிய கிராமங்களில் வசிக்கும் 150 குடும்பத்தினர் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் காவிரி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT