ராமநாதபுரம்

கொழுந்துரை கிராமத்தில் தேங்கிய மழைநீரால் தொற்றுநோய் அபாயம்

DIN

முதுகுளத்தூர் அருகே கொழுந்துரை கிராமத்தில் மழைநீர் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் என கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.
   கொழுந்துரை கிராமத்தில் சமீபத்தில் கன மழை பெய்ததில் வடக்குத்தெருவில் வீடுகள், அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே மழை நீர் தேக்கமடைந்துள்ளது. மேலும் ஒரு சில  தெருக்களில் தேங்கி நிற்கும் மழைத் தண்ணீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்துள்ளது. தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் வீட்டைச்சுற்றி தேங்கியுள்ளதால் கொசுக்களால் தொற்றுநோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்க எடுக்க வேண்டுமெனவும், மழை நீர்  வெளியேற வடிகால் அமைக்க வேண்டுமெனவும் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

ஜி.வி.பிரகாஷைப் பிரிந்தார் சைந்தவி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT