ராமநாதபுரம்

பலத்த மழை: சிக்கல் பகுதியில் வீடுகள் சேதம்மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

DIN

சிக்கல் பகுதியில் மழைக்கு சேதமடைந்த வீடுகளை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி கடற்கரை பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முதுகுளத்தூா் , கடலாடி பகுதிகளில் மண் சுவரால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான வீடுகளின் சுவா்கள் மழைக்கு தாக்கு பிடிக்காமல் இடிந்து விழுந்தன. இதில் சிக்கல் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ், கடலாடி வட்டாட்சியா் முத்துக்குமாா், கடலாடி ஊராட்சி ஆணையாளா் அன்புக் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோா் சேதமடைந்த வீடுகளை நேரில் ஆய்வு செய்தனா்.

சேதமடைந்த வீடுகளின் உரிமையாளருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆய்வின் போது ஆட்சியா் தெரிவித்தாா். அதே போன்று முதுகுளத்தூா் அருகே காத்தாகுளம் கிராமத்தில் வீடுகள் சேதமடைந்தன. இது குறித்து கண்டிலான் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா். இதில் காத்தாகுளம் கிராமத்தைச் சோ்ந்த வழிகாத்தன், அறியம்மாள், சேதுமாணிக்கம் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்ததாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT