ராமநாதபுரம்

பிளக்ஸ் போர்டு: நகராட்சி, பேரூராட்சிகளில் அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்

DIN

சாலையோரங்களில் கட்சிகள், நிறுவனங்களின் சார்பில் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் போர்டுகள் வைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, அனைத்துக் கட்சியினர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், ராமேசுவரம், கீழக்கரை நகராட்சிகளிலும் மற்றும் கமுதி, அபிராமம் பேரூராட்சிகளிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.
       ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு,  ஆணையர் தனலட்சுமி தலைமை வகித்தார். இதில், துணை வட்டாட்சியர் ஜலால், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், காவல் நிலைய ஆய்வாளர் முத்துமீனாட்சி மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
    இக்கூட்டத்தில், நகராட்சிப் பகுதிக்குள் அனுமதியின்றி பேனர்கள் வைக்கக் கூடாது, மத வழிப்பாட்டு தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பாக வைக்கக் கூடாது, வன்முறையை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களுக்கு அனுமதி கிடையாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும், பேனர்கள் வைப்பதற்கு 5 நாள்களுக்கு முன்பாகவே நகராட்சி, காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக அனுமதி பெறவேண்டும், இல்லையெனில் பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
    இதேபோன்று, ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் வீரமுத்துக்குமார் தலைமையில், அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மகேஸ், மேலாளர் உதயா மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
     தொடர்ந்து, கமுதி பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் ரா. இளவரசி தலைமையிலும், மண்டல துணை வட்டாட்சியர் தென்னரசு முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரூராட்சியின் அனுமதி பெற்று கமுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 3 அடி உயரம், இரண்டரை அடி அகலத்துக்குள் மட்டுமே விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீறினால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.    அபிராமம் பேரூராட்சியில் செயல் அலுவலர் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT