ராமநாதபுரம்

சின்ன கீரமங்கலத்தில் வங்கி திறக்கக் கோரிக்கை

DIN

திருவாடானை அருகே உள்ள சின்ன கீரமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   இங்கு வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், தனியார் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளி, தனியார் நூற்பாலைகள், சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. வங்கி பரிவர்த்தனைக்கு  சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாடனை அல்லது சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொண்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வங்கிக்கு கொண்டு செல்லும் பணத்துக்கு பாதுகாப்பு இல்லாததால் தங்கள் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளை திறக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட துறையினரிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT